விஜய்யின் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் .
.@selvaraghavan joins the cast of #Beast.@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #BeastCastUpdate pic.twitter.com/sYzrCmL9zC
— Sun Pictures (@sunpictures) August 7, 2021
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.