Categories
சினிமா

விஜயின் வாரிசு….. முதல் பாடலை பாடியவர்கள் இவர்கள்தான்….. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து இப்படம் வழக்கமான விஜய் படங்களை காட்டிலும் சற்று வித்தியாசமாக அதே சமயத்தில் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என்று பல குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தில் தமன் மொத்தம் ஆறு பாடல்களை இசையமைத்துள்ளதாகவும் அத்தனை பாடல்களும் தரமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் தீபாவளி முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் முதல் பாடலை பாடகர் சித் ஸ்ரீ ராம் மற்றும் ஜோனிடா ஆகிய இருவரும் பாடியிருக்கிறார்கள். தமிழில் தற்போது புகழ்பெற்ற பாடகராக விளங்கும் சித் ஸ்ரீ ராம் மற்றும் தற்போது ட்ரெண்டான பாடகியாக வரும் ஜோனிடா இருவரும் சேர்ந்து இப்பாடலை பாடுவது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

Categories

Tech |