Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் சொகுசு கார் வழக்கு…. “இன்று வெளியாகும் தீர்ப்பு”…. பரபரப்பில் கோலிவுட் வட்டாரம்….!!!!!!

விஜயின் சொகுசு BMW X5 கார் வரி வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி விஜய் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரின் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது விஜயின் BMW X5  காருக்கான நுழைவு வரி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் சில வருடங்களுக்கு முன் நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து சுமார் 65 லட்சம் மதிப்புள்ள BMW X5 காரை இறக்குமதி செய்துள்ளார். அந்த காரருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிகவரித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதிலிருந்து மாதத்திற்கு இரண்டு சதவீதம் என்னும் அடிப்படையில் மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது என விஜய் தரப்பு மேல்முறையீடு செய்திருக்கின்றது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிகவரித்துறை கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் அனைத்து வாதங்களும் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. அதனால் நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்ற பரபரப்பு கோலிவுட் வட்டாரத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |