தேமுதிக தலைவரான விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அவர் இல்லத்தில் சோதனை நடத்தினர்.
சென்னை விருகம்பாக்கத்தில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீடு உள்ளது. அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அந்த தகவலை சொல்லி, வேறு எதையும் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்துவிட்டார். அதனால் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் சோதனையில் வெடிப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகு காவல் துறையினருக்கு கிடைத்தது பொய் தகவல் என்று தெரியவந்தது. அதனால் காவல்துறையினருக்கு போன் செய்து பொய் தகவல் அளித்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.