சாதாரண விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகளை பயன்படுத்தும் நபர்கள் 50% மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பம் செய்யலாம். சாதாரண விசைக்தறிகளில் உற்பத்தி செய்யும் பொழுது நூலிழைகள் அடிக்கடி அறுந்து விழுகின்றது.
இதனால் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் இதை தவிர்ப்பதற்கு மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதற்கு கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாரா விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் மின் பலகை பொருத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதற்கு தகுதியானவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேலூர் மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.