Categories
சினிமா தமிழ் சினிமா

‘விசித்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

விசித்திரன் படத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விசித்திரன். இந்த படத்தில் பூர்ணா, மதுஷாலினி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இயக்குனர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் ஜோசப் படத்தை இயக்கிய பதம் குமார் தான் விசித்திரன் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK Suresh feels upset for missing out on playing an antagonist in 'Master'  | Tamil Movie News - Times of India

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஆர்.கே.சுரேஷ் ‘விசித்திரன் படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. ஆனால் இயக்குனர் பாலா தான் என்னை பரிந்துரை செய்தார்’ என கூறியுள்ளார். மேலும் அவர் இந்த படம் தியேட்டரில் வெளியாகுமா? அல்லது ஓடிடியில் வெளியாகுமா? என்பதை தயாரிப்பாளர் பாலா தான் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |