Categories
மாநில செய்திகள்

விசாரணைக்கு போன போலீசார்…. போதையில் கடித்து குதறிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!!

சென்னை கோடம் பாக்கம் கோவிந்தராஜன் தெருவைச் சேர்ந்தவர் அமலா (60) நேற்று முன்தினம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பரபரப்பாக பேசினார். அதாவது தன்னையும், தன் பேரக்குழந்தையையும் என் மகன் சதீஷ்குமார் வீட்டுக்குள் பூட்டி வைத்து சிறை வைத்துள்ளதாகவும், உரிய உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்த ரோந்து போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஏட்டு பெருமாள், காவலர் வீரசெல்வன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து பூட்டிக்கிடந்த வீட்டை திறந்து அமலாவையும், அவரது மகள் வழிப் பேரனையும் மீட்டனர். இந்நிலையில் போதையில் இருந்த அமலாவின் மகன் சதீஷ்குமார் ஏட்டு பெருமாளையும், காவலர் வீரசெல்வனையும் தாக்கினார்.

மேலும் தாயார் அமலாவையும் அடித்து உதைத்தார். அப்போது அவரை பிடிக்க முயற்சி செய்த ஏட்டு பெருமாளின் கையை பிடித்து கடித்து குதறிவிட்டார். இதன் காரணமாக பெருமாள் காயமடைந்தார். அதன்பின் அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெருமாள் மற்றும் அமலா கொடுத்த புகார்களின் அடிப்படையில் போதை வாலிபர் சதீஷ்குமார் (35) மீது 2 வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து மாம்பலம் உதவி கமிஷனர் பாரதிராஜன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் சதீஷ்குமார் போதையை ஏற்றி இத்தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

Categories

Tech |