Categories
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தடையை மீறி போராட்டம் : சந்திரபாபு நாயுடு கைது!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வந்தார். இதனை அறிந்து அங்கு வந்த ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், சந்திரபாபு நாயுடுவின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.

இதனால் 6 மணி நேரமாக அவர் விமான நிலையத்திலேயே காத்திருந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த தெலுங்குதேச கட்சியினரும் விமான நிலையம் முன்பு திரண்டனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களுக்கு போட்டியாக விமான நிலையம் முன்பு தெலுங்கு தேசம் கட்சியினரும் கூடியுள்ளதால் பதற்றம் நிலவியது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கிருந்த தெலுங்குதேச கட்சியினரிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு .

Categories

Tech |