Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம்” மூவி வேற லெவல்….. ஒரே ஒரு நெகட்டிவ் விமர்சனம் மட்டும் தான்….!!!!!

விக்ரம் திரைப்படத்தில் இது ஒன்று மட்டும் தான் குறை என கூறப்பட்டு வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.

படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய அளவில் விளம்பரம் செய்தார். ஐஎம்டிபி இணையதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.

மேலும் சில நெகட்டிவ் விமர்சனங்களும் கூறப்பட்டு வருகின்றது. அது கைதி திரைப்படம் பார்க்காதவர்களுக்கு விக்ரம் திரைப்படத்தின் சில காட்சிகள் கனெக்ட் ஆகாமல் போகலாம். ஆனால் கைதி திரைப்படத்தை பார்த்துவிட்டு விக்ரம் படத்திற்கு செல்லுங்கள் என லோகேஷ் கூறிவிட்டதால் அந்த விஷயத்தில் குறை சொல்ல முடியாது. ரகசிய ஏஜெண்ட் சந்தானபாரதி வீட்டில் வேலை செய்யும் பெண் திடீரென சண்டை போடும் காட்சிகள் தேவை இல்லாத ஒன்றாக இருக்கின்றது என கூறப்படுகின்றது. மேலும் படத்தின் கான்செப்ட் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கூறி இருக்கலாம் எனவும் படத்தின் கான்செப்டும் கைதி படத்தின் கான்செப்டும் ஒரேமாதிரியாக இருப்பதாகவும் ஆனால் ஸ்கிரீன்பிளே படத்திற்கு பெரிய பலமாக உள்ளதால் இந்த சின்ன நெகட்டிவ் கருத்து பெரிதாக எடுபடாது என கூறப்படுகின்றது.

Categories

Tech |