தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தற்போது “விக்ரம்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ளது. விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் அந்த விழாவில் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பல தகவல்களை கூறி வருகிறார். அதில் அவர் கூறியது, விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் ராகவா லாரன்ஸை தான் அணுகி இருந்தோம், ஆனால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் விஜய் சேதுபதி நடிக்க முடிவு செய்தோம். இருப்பினும் மாஸ்டர் படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி வில்லனாக காட்டியதால் இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க முதலில் தயக்கம் இருந்தது. அதனால்தான் முதலில் விஜய் சேதுபதிக்கு பதிலாக லாரன்ஸை அணுகினோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.