கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Welcome onboard @anbariv Masters👊🏻@ikamalhaasan @RKFI #Vikram pic.twitter.com/hcbtu50GKR
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 12, 2021
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.