Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்திற்காக லோகேஷ் போட்ட மாஸ் பிளான்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…!!!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இரு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vikram First Look: Kamal Haasan, Fahadh Faasil and Vijay Sethupathi Make  Terrific Trio in Lokesh Kanagaraj's Film

இந்நிலையில் விக்ரம் படத்தை இரு பாகங்களாக வெளியிட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. தற்போது அதேபோல் விக்ரம் படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Categories

Tech |