விக்ரம் மூன்றாம் பாகத்தில் சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.
படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய அளவில் விளம்பரம் செய்தார். ஐஎம்டிபி இணையதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.
இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சூர்யா கிளைமேக்ஸில் வந்து அசத்தி இருப்பார். படத்தின் வெற்றியை அடுத்து மூன்றாம் பாகத்திற்கான ஆர்வமானது அதிகரித்துள்ளது. கமல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, மூன்றாம் பாகம் உருவானாலும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் சூர்யா நடித்த காட்சிகள் மூன்றாம் பாகத்திற்கு ஆரம்பமாக இருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு பேட்டியில் கூறியுள்ளதாவது, கடைசியில் மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த எனது அருமை தம்பி சூர்யா. அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணைய உள்ள திரைப்படத்தில் முழுவதுமாக காட்டி விடலாம் என இருக்கிறேன் என்று கூறியிருக்கின்றார். இதன் வாயிலாக விக்ரம் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் பரவி வருகின்றது.