பிரபல நடிகர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 440 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்