Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம்” படத்தின் டைட்டில் பாடல் காப்பியடிக்கப்பட்டதா…? ஆதாரத்துடன் விமர்சனம் செய்யும் ரசிகாஸ்…!!!!!

விக்ரம் படத்தின் டைட்டில் பாடலை அனிருத் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.

படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய அளவில் விளம்பரம் செய்தார். ஐஎம்டிபி இணையதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் படம் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.

விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல், லோகேஷ் கனகராஜுக்கு காரும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்களுக்கு  பைக்குகளையும் கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருக்கின்றார்.

இத்திரைப்படம் வெளியாகி முதல் நாளில் மட்டும் ரூபாய் 40 கோடி வசூலித்ததாக செய்தி வெளியானது. இதுவரையில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 100 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகிய 7 நாட்களில் இதுவரை ரூபாய் 250 கோடி வரை வசூலித்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது விக்ரம் படத்தின் டைட்டில் பாடலை அனிருத் காப்பி அடித்ததாக இணையத்தில் செய்தி பரவி வருகின்றது. The World Music – Amunet என்ற பாடலில் இருந்து அனிருத் டைட்டில் பாடலை காப்பி அடித்திருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |