Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

உலக நாயகன் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரை படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக  காத்திருக்கின்றனர். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் குறித்த செம மாஸ் அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இளம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ்.

தன்னுடைய முதல் படத்திலேயே விமர்சனம் ரீதியாக வரவேற்ப்பை பெற்ற இவர், தனது இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கியிருந்தார். விஜய்யின் பிகில் படத்துடன் நேரடியாக மோதிய  இந்தப்படம் லோகேஷின் தனித்துவமான இயக்கத்தின் காரணமாக  மெகா ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தினை இயக்கி உள்ளார். இந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

கமல் படங்களை பார்த்து நான் தமிழ் சினிமாவிற்கு வந்தேன் என வெளிப்படையாக கூறிய லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த இசை வெளியீட்டு விழா வருகின்ற 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதே நாளில் படத்தின் டிரைலரும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் மாஸ்டரில் லோகேஷுடன் பணியாற்றிய விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் போன்றோர் இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் முக்கிய வேடத்தில் பஹத் பாசில் நடித்திருக்கின்றார். ஜூன் மூன்றாம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |