சியான் 61 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அண்மையில் வெளியானது. இதில் இவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சீயான் 61 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இதன் டெஸ்ட் சூட் நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றது.