இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சியான் 60’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .
7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் . இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த கார்த்திக் சுப்பராஜ் ‘சியான் 60’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் மீதமுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.