Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமின் அசத்தலான நடிப்பில் வெளியான “கோப்ரா”…. முதல் நாளில் எத்தனை கோடி வசூலித்தது தெரியுமா….??????

கோப்ரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31 வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் விக்ரம் ஒவ்வொரு வேடங்களிலும் மிரட்டி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

இத்திரைப்படம் விக்ரம் ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு பொதுவான ரசிகர்களை கவரவில்லை. இதனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதே பொதுவான விமர்சனமாக இருக்கின்றது. சொதப்பலான திரைக்கதையால் விக்ரமின் நடிப்பு வீணாகிவிட்டது என விமர்சனம் எழுந்திருக்கின்றது. படத்திற்கு பல விமர்சனங்கள் வந்தாலும் யாரும் விக்ரமின் நடிப்பை குறை கூறவில்லை. இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகி உள்ளது. வெளியான முதல் நாள் தமிழகத்தில் மட்டும் 12 கோடியும் கேரளாவில் 1.25 கோடியும் மலேசியாவில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |