Categories
சினிமா

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமண புகைப்படங்கள் வெளியீடு…. ரசிகர்கள் குஷி….!!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா ஜோடியின் திருமணம் கடந்த மாதம் முடிவடைந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த திருமணம் நடந்ததால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிட்டு வருகிறார். தற்போது அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை கொண்டாடினர்.

சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இந்த ஜோடி தங்கள் ஒரு மாத ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடக பதிவில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Categories

Tech |