Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்கி, லக்கி கிடையாது”…. “நயன்தான் லக்கி”…. பேட்டியில் ஸ்ரீநிதி ஓபன் டாக்…!!!!!!

விக்கி-நயன் குறித்து பேட்டியில் ஸ்ரீநிதி கூறியது வைரலாகி வருகின்றது. 

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த ஜூன் 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி நயன்-விக்கி திருமணம் குறித்து பேட்டியில் கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவர் கூறியுள்ளதாவது நயன்தாரா அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது. நயனுக்கு தமிழ் பையன் கிடைத்திருப்பதால் நல்லா பார்த்துப்பார். இதனால் நயன்தான் லக்கி என கூறியுள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |