நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கிறார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கபடுகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டலில் இவர்களுடைய திருமணம் நடைபெறுகிறது.
திருமணம் அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்திற்கு ரஜினி, கமல், அஜீத், விஜய் என முன்னணி பிரபலங்கள் 200 பேருக்கு மட்டுமே அழைத்து அழைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்கு பின் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளனர்.