பொதுமக்களை இனி காவல்துறையினர் ஒருமையில் அழைக்க கூடாது என கேரள டிஜிபி அணில் காந்த் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மகன் முன்பு போலீசார் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் போலீசாரிடம் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்ற கருத்தை தெரிவித்தார். சமூகத்தில் அனைத்து தரப்பினரையும், போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் கேரள டிஜிபி அனைத்து காவல் நிலையத்திற்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் பொதுமக்களை காவல்துறையினர் கண்ணியமாகவும், மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார். எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்களை ‘வா’ ‘போ’ என ஒருமையில் அழைக்க கூடாது என்று கூறியுள்ளார். இதையும் மீறி காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார் .