நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவர் பேரைச் சொன்னாலே பெரும் வரவேற்பு உண்டு. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு வடிவேலு நீண்ட நாட்களாக திரையுலகின் வரவில்லை. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது. பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள வடிவேலுவை பழைய வீடியோக்கள் மூலமும் மீம்ஸ்கள் மூலமும் மட்டுமே கண்டு ரசித்து வரும் அவரது ரசிகர்கள் புதிய புகைப்படம் கிடைத்ததும் அதை வைரலாகி வருகின்றனர்.
இந்தப் படத்தை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் மனோபாலா, சந்தான பாரதி மற்றும் கங்கை அமரன் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.