நயன்தாரா நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிறுவனம் உள்பட ஐந்து நிறுவனங்கள் செஸ் ஒலிம்பியாட்டின் துவக்க விழா நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியை பார்த்து நயன்தாரா வெகுவாக பாராட்டியதாக, கணவர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,“இயக்குநராக என்னுடைய முதல் நேரலை நிகழ்ச்சி இது என்பதால், எப்படி நடக்கப்போகிறது என்று பயந்தேன். ஆனால், நல்லபடியாக நடந்து முடிந்தது. முடிந்தவுடனேயே நயன்தாராதான் எனக்கு முதல் மெசேஜ் அனுப்பினார். வாவ்… ஆச்சரியமாகவும், நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாகவும் இருந்தது” என்று வாழ்த்தியதாக தெரித்துள்ளார்.