Categories
சினிமா

வாவ்… வாட் எ செல்பி… தளபதி 66-ன் ஃபர்ஸ்ட் லுக்….தீயாக பரவும் புகைப்படம்….!!!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்.  மேலும் அவர் இந்திய சினிமா அளவில் ஒரு ‘பிஸ்னஸ் கிங்’ என அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பீஸ்ட். இது  ரசிகர்கள் மத்தியில் கலவையான பல விமர்சனங்களை பெற்று வந்தபோதிலும் அதிக வசூலை வாரி கொடுத்தது.

இதையடுத்து தற்போது தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய், அவரது 66 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். தளபதி 66 என இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் தளபதி 66 படத்தின், நடிகர் விஜய்யின் லுக் வெளியாகியுள்ளது. இதையடுத்து செல்பி போன்ற அந்த போட்டோவில் நடிகர் விஜய் சப்பி கன்னங்களுடன் மிகவும் க்யூட்டாக உள்ளதாகவும், மேலும்  ‘தளபதி ரீசென்ட் லுக்’  என இந்த போட்டோவை  ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து விஜய்யின் இந்த போட்டோ வெளியானதையடுத்து  #Thalapathy66 என்ற ஹேஷ்டேக்கும் தற்போது ட்ரென்ட்டாகி வருகிறது.

Categories

Tech |