டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு கழிப்பறை வசதி அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிப்பறை வசதியை திருநங்கைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பான இடத்தை கொடுத்து திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் பாகுபாடுகளை களையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் கழிவறை வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி கழிப்பறை தவிர்த்து தங்களுடைய பாலினத்திற்கு ஏற்ற கழிவறைகளை பயன்படுத்தவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதுமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் 347 திருநங்கைகளுக்கான கழிவறைகள் உள்ளது. இது அவர்களுக்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.