நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்ததாக ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதில் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்தார். மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
இதன் மூலம் சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.