Categories
தேசிய செய்திகள்

வாவ்…!  இனி டெலிவரி லேட் ஆகாது…. ஒரே நாள்ல உங்க பொருள் உங்ககிட்ட…. அமேசானின் புதிய பிளான்…!!!!

தொலைதூர பகுதிகளுக்கு விரைவாக பயணம் செய்து டெலிவரி கொடுப்பதற்காக ரயில்வே உடன் அமேசான் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்திய ரயில்வே துறையுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டெலிவரி சேவைகளை இந்தியாவில் மேம்படுத்துவதற்காக ரயில்வே துறையுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியால் பல்வேறு நகரங்களுக்கு இடையேயான 110 வழித்தடங்களில் வேகமாக பொருட்களை டெலிவரி செய்ய முடியும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் ஓரிரு நாட்களில் டெலிவரி செய்ய முடியும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டும் முதலாகவே இந்திய ரயில்வேயுடன் அமேசான் இணைந்து டெலிவரி செய்கின்றது. காலப்போக்கில் வழித்தடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது புதிதாக 110 வழிதடங்களை சேர்க்க அமேசான் முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக தொலைதூரப் பகுதிகளுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் விரைவாக பொருட்களை டெலிவரி செய்ய முடியும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 97 சதவீதம் பின்கோடுகளுக்கு அமேசான் டெலிவரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |