கவிஞர் கபிலனின் மகள் தூரிகை இறப்பிற்கு இயக்குனர் வசந்தபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை நேற்று முன்தினம் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்செய்தியானது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தூரிகை, பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.
இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தனது இணையபக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, என் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் அநீதி திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தூரிகை கபிலன் வேலை செய்தார். செய்தி கேட்டு இரவெல்லாம் மனதிற்குள் ஆந்தைகள் கத்தின. வாழ்வு ஏன் இத்தனை துயரத்தை தருகிறது என குறிப்பிட்டு இருக்கின்றார்.