எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
எகிப்தின் தலைநகரான கைரோ நகரிலிருந்து பயணிகள் ரயில் ஓன்று நைல் டெல்டா நகரமான Mansouraவிற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கலியுபியா மாகாணத்தில் உள்ள பான்ஹா நகரில் ரயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இதனால் ரயில் பெட்டியில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் முயற்சிக்குப் பின்னர் போராடி ரயிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். மேலும் அவர்கள் உடலில் பலத்த காயங்கள் மற்றும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்க மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சுமார் 60 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்திற்குள் இது மூன்றாவது ரயில் விபத்து என்பது குறிப்பிடத்தக்கதாகும்.