Categories
அரசியல் மாநில செய்திகள்

வாழ்நாள் முழுவதும்… ஒரே நோக்கம் ”இதான்”… கூட்டணிக்குள் குழப்பம் … போட்டு உடைத்த அமைச்சர் …!!

திமுக கூட்டணியில் உள்ள முரண் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய ஒரு சிறப்பு என்று சொன்னால், திமுகவை போல ஒரு அடாவடித்தனம் கூட்டணி கட்சிகளிடையே செய்வது கிடையாது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.எஸ் அழகிரி அழுது விட்டார். அழ வைத்து விட்டார்கள்.

அந்த அளவுக்கு கண்ணீர் விட்டார். வேறு  வழி இல்லாமல் மன கசப்போடு தான் அங்க இருக்குறாங்க. மனப்பூர்வமாக திமுக கூட்டணியில் இல்லை. இதான் உண்மை, இதனுடைய வெளிப்பாடு நிச்சயமா சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக காங்கிரசை தோற்கடிக்க திமுகவும், திமுகவை தோற்கடிக்க காங்கிரஸ்ஸும் கண்டிப்பா வேலை செய்வாங்க. ஏனென்றால் அழுது புலம்பினார் அவரு.

1967இல் சுதந்திரா கட்சியோடு பேரறிஞ்சர் அண்ணா உடன்பாடு வைத்தார். சுதந்திரா கட்சிக்கும், அண்ணா தலைமையிலான திமுகவுக்கும் மாறுபட்ட கருத்துதான். ஆனால் கூட்டணி வச்சு ஜெயிச்சாரு. அதே போல இன்றைக்கு திமுக காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் வைத்துள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் காங்கிரசை எதிர்ப்பது சி.பி.ஐ, சி.பி.எம். இவர்கள் ஒட்டுமொத்தமாக.. வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பு தான் எங்களுடைய ஒரே நோக்கம்.

காங்கிரஸ் ஒரு முதலாளித்துவ கட்சி…  இது எங்க இருக்கோ அங்கெல்லாம் நாங்க சேர மாட்டோம் என சொன்னாங்க. இன்னைக்கு என்னாச்சு ? சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், டிஎம்கே எல்லாம் சேர்ந்து தான் வருகிறார்கள். எங்களை பொறுத்தவரையில் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேற, இதான் முக்கியம். கூட்டணியில எல்லாம் இருக்காங்க. ஆனால் கொள்கை வேற, அவங்க கொள்கை வேறு, எங்கள் கொள்கை வேறு. எங்களின் கொள்கையை நாங்கள் தெளிவா தேர்தலறிக்கையில் சொல்லிட்டோம் என அமைச்சர் கூறினார்.

Categories

Tech |