Categories
உலக செய்திகள்

வாழைப்பழ பெட்டியை தேடி எடுத்தவர்கள்…. காத்திருந்து பிடித்த போலீஸ்…. இதுதான் காரணமா…?

வாழைப்பழ பெட்டியில் வைத்து போதைப்பொருள் கடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனியில் இருக்கும் பவேரியா மாகாணத்தில் அமைந்துள்ள வாழைப்பழ கடைக்கு 7 மர்ம நபர்கள் சென்று சில பெட்டிகளை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து பின்னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டது போதைப்பொருள் கடத்தல் கும்பல். அவர்கள் வாழைப்பழம் பெட்டியில் போதைப் பொருளை கடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . உணவு தரக்கட்டுப்பாடு ஊழியர் சோதனை செய்தபோது வாழைப்பழ பெட்டியில் போதைப்பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகார்  அளிக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் பெட்டியை எடுக்க வருபவர்களுக்காக காத்திருந்தனர். அச்சமயத்தில் 7 மர்ம நபர்கள் கடைக்குள் சென்று குறிப்பிட்ட பெட்டியைத் தேடி எடுத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை பின்தொடர்ந்து கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 50 மில்லியன் யூரோக்கள் என கூறப்படுகின்றது.

போதைப்பொருளை இடம் மாற்றியவர்கள்தான் கைது செய்யப்பட்டவர்கள் என்பதால் அதனை யார் அனுப்பி வைத்தது என்பது இதுவரை தெரியவரவில்லை. 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மீதமிருந்த ஆறு பேரில் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |