முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கொரோனா காலத்தில் மக்கள் நலனை கருத்திக்கொண்டு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க உத்தரவிட்டார். மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிட மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ளவும், தமிழகத்தில் ஒருவர்கூட பட்டினியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும், எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விடுத்து பசியைப் போக்கும் உன்னத பணியில் ஈடுபட வேண்டும் என்று தனது தொண்டர்களுக்கு வேடுகோள் விடுத்தார்.
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் ஸ்டாலின் பசியால் யாரும் வாடக் கூடாது என்கிறார். கொரோனா முதல் அலையின் போது அம்மா உணவகம் மூலம் ராயபுரத்தில் முட்டை, வாழைப்பழம், வடையை மூன்று வேளையும் இலவசமாக வழங்கினேன். தற்போதைய அரசும் அதுபோன்று உணவு வழங்குமா? மனம் வருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.