Categories
மாநில செய்திகள்

“வாழைத்தண்டு நாரிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகள்” தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி இலக்கு…. அமைச்சர் தகவல்….!!!!

ராணிப்பேட்டையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் முதல் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டார். இவர் கோ ஆப்டெக்ஸ் கடையை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய ரக ஆடைகளை அமைச்சர் பார்வையிட்டார். அதன் பிறகு அமைச்சர் ஆர். காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது, தீபாவளி பண்டிகைக்கு நடபாண்டில் 200 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு தீபாவளி பண்டிகைக்காக 500 மாடல்களில் புதிய ரக ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் வாழைத்தண்டில் இருந்து எடுக்கப்படும் நார்கள் மூலம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுகிறது. அதன் பிறகு மாநிலம் முழுதும் மூடப்பட்ட நிலையில் இருக்கும் கைத்தறி கூடங்கள் மற்றும் நூல் தொழிற்சாலைகளை திறப்பது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஆடைகளை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Categories

Tech |