தனுஷ் நடித்த கர்ணன் படத்தை கவுரவப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் பிரபல இதழ்.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம்தான் கர்ணன்.மேலும் நட்டி நட்ராஜ், லால், ரஜிஷா விஜயன், யோகிபாபு உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.. இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி பெரும் வசூலையும், நல்ல வரவேற்பையும் பெற்றது. கொடியங்குளம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இந்தப் படத்தை பார்த்த தமிழக அரசியல்வாதிகள், பிற நடிகர்கள் உட்பட பலரும் பாராட்டினர்..
தியேட்டரில் வெளியான பின் ஒரு மாதம் கழித்து அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியானது. கொரோனா சூழலுக்கு இடையே தியேட்டரில் பார்க்க முடியாத மக்கள் ஓடிடியில் இந்த படத்தைப் பார்த்தனர்.. காலதாமதமானாலும் இந்த படத்தை அவர்கள் பாராட்ட தவறவில்லை…
அந்த அளவிற்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது கர்ணன்.. இந்நிலையில் அமெரிக்க நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) பரிந்துரைத்த உலகளவில் பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள் பட்டியலில் கர்ணன் 4ஆவதாக இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து இடம் பிடித்த ஒரே படம் என்ற கவுரவத்தையும் பெற்றுள்ளது.
இதோ அந்த 5 படங்கள் :
‘The Father Who Moves Mountains’
‘Koshien: Japan’s Field of Dreams’
‘I Never Climbed the Provincia’
‘Karnan’
‘The Cloud in Her Room’