சேலம் மாவட்டத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளர்.
சேலம் மாவட்டத்திலுள்ள மாதையன்குட்டை பகுதியில் ஜெகதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் மது வாங்கி வருவதன் பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், கார்த்திக் ஆகியோருக்கும் ஜெகதீஷ்குமார்க்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தமிழரசன் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து ஜெகதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்த கொலை காரணமாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், கார்த்திக் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் கொலை செய்த குற்றத்திற்க்காக ஆயுள் தண்டனையும் தலா 2,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.