கர்நாடக மாவட்டத்தில் உள்ள ராமநகர் மாவட்டம் அருகில் லாலாஹட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த திருநங்கைகள் தங்களது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் மாண்டியா மாவட்டத்தைச் சார்ந்த ஆனந்த் என்ற வாலிபரும் கலந்து கொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கும் ஆனந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் ஐந்து திருநங்கைகளும் சேர்ந்து ஆனந்த்தை பலமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஐந்து திருநங்கைகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.