கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டல் அருகில் பிரபல ரவுடியான முத்து ரிஷி என்பவர் ஒருவரை வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பார்த்ததும் காவல்துறையினர் முத்து ரிஷியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.