கணவனை பெண் தோளில் சுமந்து நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் பகுதியில் போர்பதேவ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் பக்கத்து வீட்டிற்கு ஒரு வாலிபர் குடிவந்துள்ளார். அந்த வாலிபருடன் பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த பெண் கணவன் இல்லாத நேரத்தில் வாலிபரை அடிக்கடி வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதைப்பார்த்த கிராம மக்கள் வாலிபரையும் பெண்ணையும் பலமுறை கண்டித்துள்ளனர். இருப்பினும் அந்தப் பெண் கேட்காமல் தொடர்ந்து வாலிபருடன் கள்ளக்காதலில் இருந்தார்.
இந்நிலையில் வாலிபரும், பெண்ணும் உல்லாசமாக இருந்த போது கிராம மக்கள் கையும் களவுமாக அவர்களை பிடித்தனர். அதன்பின் அந்தப் பெண்ணிற்கு கிராம மக்கள் செருப்பு மாலை அணிவித்தனர். அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து அவரை தோளில் சுமந்து செல்லுமாறு பெண்ணிடம் கூறியுள்ளனர். அந்தப் பெண் தன்னுடைய கணவரை தோளில் சுமந்து நடந்து செல்லும் போது சிலர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் காவல்துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.