வாலிபரின் கழுத்தை அறுத்த குற்றத்திற்காக சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொடமாண்டபட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கல்லாவி மேட்டு தெரு காலணியில் சகோதரர்களான அன்பரசன்(36), கலையரசன்(31) ஆகியோர் வசித்து வருகின்றனர் இவர்கள் 3 பேரும் உறவினர்கள் ஆவர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்சனை காரணமாக மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சகோதரர்கள் மணிகண்டனின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அன்பரசன் மற்றும் கலையரசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.