இந்தியாவிற்கும், சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் சென்ற 9-ஆம் தேதியன்று அருணாசலபிரதேசம் தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் சீனா மீண்டும் அடாவடியில் ஈடுபட்டது. அதாவது எல்லைக்குள் ஊடுருவி இதுவரையிலும் இருந்து வந்த நிலைமையை மாற்ற முயற்சித்தது. எனினும் இந்திய படைவீரர்கள் சரியான பதிலடி கொடுத்ததால், சீனப் படை ஓட்டம் எடுத்தது.
இம்மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இத்தகவல்களை இந்திய ராணுவ வட்டாரங்கள் நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆகவே எல்லையில் சீனப்படை மீண்டுமாக ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றதை பதிலடி கொடுத்து இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த மோதலில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரியான ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.