Categories
தேசிய செய்திகள்

வார இறுதி ஊரடங்கு அமல்…. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய தலைநகரான டெல்லியில் நேற்றைய நிலவரப்படி 10,756 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு நேர்மறை விகிதம் 18.04 சதவீதமாக குறைந்துள்ளது. இதனிடையில் மாநில சுகாதாரத்துறை அங்கு நோய் தொற்றின் பாதிப்பு உச்ச நிலையை கடந்துள்ள நிலையில் , தொடர்ந்து அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை ஒட்டி, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) சில கோவிட்-19 வழிகாட்டுதல்களை மாற்றியுள்ளது.

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதையடுத்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது டெல்லி நகரில் குறைந்து வரும் கொரோனா வழக்குகள் மற்றும் நேர்மறை விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிதாக வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய வழிகாட்டுதல்கள்

# பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும்.

# விளையாட்டு வளாகங்களும், நீச்சல் குளங்களும் மூடப்படும்.

# உணவகங்கள் மற்றும் பார்கள் திறக்கப்படாது, எனினும் ஆன்லைன் டெலிவரி அனுமதிக்கப்பட்டுள்ளது.

# மெட்ரோ சேவைகள், பொதுப் போக்குவரத்து பேருந்துகள் ஆகியவை முழு இருக்கை வசதியுடன் இயங்கும் என்றும் நின்று செல்லும் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

# வார இறுதி ஊரடங்கு உத்தரவின்போது, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கையாளும் கடைகள் தவிர மற்ற எல்லா கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

# சந்தைகள் மற்றும் மால்களில் உள்ள கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படலாம்.

# கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

# திரையரங்குகள், ஸ்பாக்கள் மற்றும் ஜிம்கள் மூடப்பட்டிருக்கும்.

Categories

Tech |