தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, ஷாம் மற்றும் யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய 2 திரைப்படங்களின் படப்பிடிப்பும் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் நிறைவடைவதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் துணிவு திரைப்படத்தை அடுத்த வருட ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் 2 படத்தின் சூட்டிங்கும் ஒரே மாதிரியாக நிறைவடைவதால் ரசிகர்கள் மத்தியில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.