Categories
சினிமா

வாரிசு Vs துணிவு…. ஆக்ஷனில் குதித்த தல ரசிகர்கள்…. வேற லெவலில் ரியாக்சன் கொடுத்த தளபதி ரசிகர்கள்…. மதுரையில் போஸ்டர் யுத்தம்….!!!!

தமிழகத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் பட்சத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்து தான். அவ்வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இவர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த படம் வெற்றி பெற வித்தியாசமாக விளம்பரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் விஜய் மற்றும் அஜித் படங்கள் திறக்கி வர இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க மறுப்பக்கம் போஸ்டர்களில் வார்த்தை போரில் இரு நடிகர்களின் ரசிகர்களும் குதித்துள்ளனர். அதன்படி மதுரையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |