பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் வாரிசு படத்தை வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் தமிழ் திரை பிரபலங்கள் பலரும் வாரிசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது, தெலுங்கு சினிமாவில் நான் இல்லை, அங்கு சென்று நான் எப்படி பேச முடியும்? என்று கடுப்பாக கூறிவிட்டு அங்கிருந்து நழுவி சென்றார்.