Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா…. ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!!1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24-ஆம் தேதி நடைபெறுவதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் முன் தோன்றி நடிகர் விஜய் உரையாற்றுவார் என கூறப்படுகிறது. மேலும், அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |