மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு பதவி நியமனம் செய்வது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் வைகோ தனது மகனுக்கு பதவி வழங்கவுள்ளதாக அறிவித்தார். இது குறித்து வைகோ கூறியதாவது, “மதிமுகவில் துரை வைகோவிற்கு தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் பதிவான 106 வாக்குகளில் 104 வாக்குகள் துரை வைகோவிற்கு பதிவாகியது. மேலும் துரை வைகோவிற்கு பதவி வழங்கியது வாரிசு அரசியல் இல்லை தொண்டர்களின் ஆசைப்படியே வழங்கப்பட்டது.பொதுக்குழுதான் கட்சியின் பொது செயலாளரை தேர்வு செய்யும்” என்று கூறினார்.