Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை…. சம்பளம் குறைவு…. அமலுக்கு வரும் புதிய விதி…!!

இந்தியாவில் அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை முறையில் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்து கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது.

இந்த புதிய விதிமுறைகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் வேலை நேரம் விடுமுறை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. இதன்படி ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரம் ஆக அதிகரிக்கப்படும் என்றும், வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைய வாய்ப்புள்ளதாகவும்  கூறப்படுகிறது.

Categories

Tech |