Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாய்ப்பே இல்ல…. இந்த அணிக்கு கடைசி இடம்தான்?…. முன்னாள் கேப்டன் கணிப்பு….!!!!

கடந்த வருடம் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா என 2 கட்டங்களாக நடைபெற்றது. அதில் கேப்டன்சி மாற்றம், அணியில் மாற்றம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பல அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தாலும் நடைபெற்ற 14 போட்டிகளில் 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே நிச்சயம் இந்த வருடம் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மார்ச் 29ஆம் தேதி எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஒரு இடத்தில்கூட எழுச்சி காணாமல் தோல்வியை சந்தித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் நடைபெற்ற 7 ஐபிஎல் போட்டிகளில் தாங்கள் அடித்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை டிஃபென்ட் செய்து வாகை சூடியுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் நிகோலஸ் பூரன், ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன் ஆகியோர் நல்ல பார்மில் இல்லாததுதான் பெரும் பின்னடைவை அணிக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போட்டி குறித்து கூறியிருப்பதாவது, “இது மிகவும் மோசமான போட்டியாக ஹைதராபாத் அணிக்கு அமைந்துள்ளது. ஹைதராபாத் அணியில் பேட்டிங், பவுலிங்கின் ஆழம், ஒருங்கிணைப்பு என அனைத்துமே பிரச்சினையாக உள்ளது. இப்படியே போனால் கடைசி 2 இடங்கள் தான் இந்த அணிக்கு கிடைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |